நயன்தாராவை விட டபுள் மடங்கு சொத்து... பிசினஸில் லேடி சூப்பர்ஸ்டார் ஆக வலம் வரும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரும், கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kavya Maran
சன் நெட்வொர்க் எனும் சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வருபவர் கலாநிதி மாறன். இவருக்கு சொந்தமாக 32 டிவி சேனல்கள், 45 ரேடியோ சேனல்கள் என மீடியா உலகின் முடிசூடா ராஜாவாக திகழ்ந்து வருகிறார் கலாநிதி மாறன். இவருக்கு காவேரி மாறன் என்கிற மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு கடந்த 1992-ம் ஆண்டு மகளாக பிறந்தவர் தான் காவ்யா மாறன். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் சமயத்தில் சோசியல் மீடியா சென்சேஷனாக காவ்யா திகழ்ந்து வருகிறார்.
Kalanithi maran daughter kavya
கலாநிதி மாறன் கடந்த 2012-ம் ஆண்டு டெக்கன்சார்ஜர்ஸ் ஆக இருந்த ஐதரபாத் அணியை விலைக்கு வாங்கினார். இதையடுத்து 2013-ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஐதராபாத் என்கிற பெயரில் அந்நிறுவனம் ஐபிஎல்-லில் களமிறங்கியது. டேவிட் வார்னர் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் அணி கடந்த 2016-ம் ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இதற்கு முன்னர் இருந்த டெக்கன் சார்ஜர்ஸ் அணியும் ஒரு முறையை கோப்பையை வென்றிருக்கிறது.
SunRisers CEO kavya
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சன் ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக காவ்யா நியமிக்கப்பட்டார். அவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காமர்ஸ் டிகிரி முடித்துவிட்டு, லண்டனில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தார். அதன்பின்னர் தன் தந்தையுடன் பிசினஸில் களமிறங்கிய காவ்யாவுக்கு சன் ரைசர்ஸ் அணியை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினார் கலாநிதி மாறன். காவ்யாவின் பொறுப்புக்கு சென்ற ஆண்டே சன்ரைசர்ஸ் அணி பைனல் வரை சென்று நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Kavya Maran photos
இதற்கு அடுத்தடுத்த சீசன்களில் சன் ரைசர்ஸுக்கு பெரியளவில் வெற்றிகரமான சீசன்களாக அமையவில்லை. இதனால் போட்டி நடக்கும் போதே காவ்யா அப்செட் ஆன சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. சன் ரைசர்ஸ் மேட்ச் என்றாலே காவ்யாவை போகஸ் செய்வதற்கென ஒரு கேமரா சுற்றிக்கொண்டே இருக்கும். போட்டியின் போது அவர் சிரித்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆக்கினர்.
Kavya Maran business
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேசும்போது கூட, கலாநிதி மாறனுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். இனி வரும் சீசன்களிலாவது நல்ல நல்ல பிளேயர்ஸை எடுங்க, மேட்சின் போது காவ்யாவின் ரியாக்ஷன்களை பார்க்கும் போது நமக்கு வருத்தமா இருக்கு என குறிப்பிட்டு சொல்லினார். அவர் சொன்னபடியே இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஏலத்தில் ஐதராபாத் அணிக்காக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடி கொடுத்து எடுத்தார். அதேபோல் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட்டையும் தங்கள் அணிக்காக ஏலத்தில் தட்டித்தூக்கினார் காவ்யா.
kavya maran net worth
இப்படி சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும், சன் நெட்வொர்கின் மாஸ்டர் மைண்ட் ஆகவும் செயல்பட்டு வரும் காவ்யா மாறனுக்கு சொந்தமாக ரூ.409 கோடி சொத்துக்கள் இருப்பதாக ஜன் பாரத் டைம்ஸின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன் ரூ.19 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு விழா... சர்ப்ரைஸாக ஆட்டோவில் வந்து கலந்துகொண்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்