MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Dec 17 2023, 06:44 AM IST| Updated : Dec 17 2023, 06:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Magalir urimai thogai

Magalir urimai thogai

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

24
kalaignar urimai thogai thittam

kalaignar urimai thogai thittam

இந்த திட்டத்தில்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. சுமார் 55 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.  பல இடங்களில் இந்த திட்டத்திற்கு குடும்ப தலைவிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் தங்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையென புகாரும் தெரிவிக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
tamilnadu family women head cash

tamilnadu family women head cash

அதன் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் மேல்முறையீடு செய்தனர். இதில், 7.35 லட்சம் பயனானிகள் சேர்க்கப்பட்டு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. 

44
Thangam Thennarasu

Thangam Thennarasu

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியிருந்தும் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved