- Home
- Gallery
- KRK Movie: ரசிகர்களை ஏமாற்றினார்களா விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தார...KRK படம் நாளை ரிலீஸ் ஆவதில் சிக்கலா..?
KRK Movie: ரசிகர்களை ஏமாற்றினார்களா விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தார...KRK படம் நாளை ரிலீஸ் ஆவதில் சிக்கலா..?
Kaathuvaakula Rendu Kaadhal: முக்கோண காதல் கதையான, ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின், ப்ரீமியர் காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

kaathuvaakula rendu kaadhal
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு காதல் மலர காரணமாக இருந்த, திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
Kaathuvaakula Rendu Kaadhal
அனிருத் இசைமையத்துள்ள இந்த படத்திற்கு, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உருவாகியுள்ளது. இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
KaathuVaakula Rendu Kaadhal
இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
KaathuVaakula Rendu Kaadhal
முன்னதாக, படத்தின் டீசர் மற்றும் படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ஹிட் ஆகி விட்டனர். இதையடுத்து, படத்தின் முதல் ப்ரோமோ கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுத் தந்தது. மேலும், படத்தின் இரண்டாவது ப்ரோமோ நேற்று வெளியானது.
KaathuVaakula Rendu Kaadhal
இந்த திரைப்படம் வரும், ஏப்ரல் 28-ம் தேதி அதாவது நாளை திரையிரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்தது. இதையடுத்து, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று நடைபெற்று வருகிறது.
KaathuVaakula Rendu Kaadhal
இதையடுத்து, ரசிகர்கள் அதன் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருப்பதால், படத்தின் முன் பதிவு வேலைகள் சூடு பிடித்து வருகின்றனர்.
kathuvakkula rendu kadhal
இந்த நிலையில், அமெரிக்காவில் அதன் ப்ரீமியர் காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உங்களது பணத்தை திருப்பி வாங்கி கொள்ளுங்கள் என்று திரையரங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
kathuvakkula rendu kadhal
திடீரென ஷோக்கள் ரத்து செய்யக்ப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சனை வந்துவிடுமா என்ற பயத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.