- Home
- Gallery
- Jyothika Childhood Photos: 5 வயதில் கூட ஜோதிகா அம்புட்டு அழகு! பலரும் பார்த்திடாத அன்சீன் புகைப்படங்கள்.!
Jyothika Childhood Photos: 5 வயதில் கூட ஜோதிகா அம்புட்டு அழகு! பலரும் பார்த்திடாத அன்சீன் புகைப்படங்கள்.!
நடிகை ஜோதிகா குழந்தையாக இருக்கும் போது, எடுத்து கொண்ட சில அரிய புகைப்படங்கள் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Nagma sister Jyothika:
நடிகை நக்மாவை தொடந்து, அவரது தங்கை என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜோதிகா. பாலிவுட் திரையுலகம் இவருக்கு கை கொடுக்காத நிலையில்... கோலிவுட் திரையுலகம் இவரை முன்னணி நடிகையாக மாற்றி அழகு பார்த்தது.
Jyothika Movies:
அதன்படி, தல அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவை எஸ்.ஜே.சூர்யா கமிட் செய்த நிலையில், ஹிந்தி படத்தில் அதே நேரத்தில் நடித்து வந்ததால்... இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதை தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா கேட்டு கொண்டதற்காக கேமியா ரோலில் நடித்தார். சிறு கதாபாத்திரம் என்றாலும் அது அதிகம் பேசப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஜோவுக்கு வாய்ப்பும் கிடைத்தது.
Jyothika with sridevi:
பின்னர் தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்த துவங்கினார். ஒரு கட்டத்தில் இவரின் அக்கா நக்மா திரையுலகை விட்டு காணாமல் போனாலும், ஜோதிகா கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார்.
Jyothika Bollywood Movies
பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தமிழ் நாட்டு மருமகளாகவும் மாறிய ஜோதிகா, தியா - தேவ் என்கிற இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆன பிறகு, 36 வயதினிலே படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும் கடந்த சில வருடங்களாக தமிழில் மட்டுமே கவனம் செலுத்திய இவர், தற்போது மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தி பட வாய்ப்புக்காக ஜோ தன்னுடைய கணவர் சூர்யாவுடன், மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா தன்னுடைய குழந்தைகளையும் அங்கு தான் படிக்க வைத்து வருகிறார்.
Jyothika Childhood Photos:
இந்நிலையில் ஜோதிகாவின் சிறிய வயது புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில், அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை ஸ்ரீ தேவியுடன் ஜோதிகா தன்னுடைய 5 வயதில் எடுத்து கொண்ட புகைப்படம் செம்ம ஹைலைட் என கூறலாம்.