Jyotika : ஒரு நாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீங்களா... ஓப்பனாக கேட்ட ரசிகைக்கு ஜோதிகா கொடுத்த ‘நச்’ ரிப்ளை
நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் எனக்கு தருவீர்களா என கேட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.
Suriya, Jyothika
அஜித்தின் வாலி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஜோதிகா. முதல் படத்திலேயே தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஜோதிகாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் குறுகிய காலத்தில் டாப் ஹீரோயினாக உயர்ந்தார். முன்னணி நடிகையாக வலம் வந்தபோதே நடிகர் சூர்யா மீது காதல் வயப்பட்டார் ஜோதிகா. இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு சூர்யாவை கரம்பிடித்தார் ஜோதிகா.
Suriya Wife Jyothika
சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும்போதே சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, நடிப்புக்கும் முழுக்கு போட்டார். திருமணத்துக்கு பின்னர் 7 ஆண்டுகள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஜோதிகா, பின்னர் 2013-ம் ஆண்டு வெளிவந்த 36 வயதினிலே படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதோடு தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக உள்ளார்.
இதையும் படியுங்கள்... Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!
Jyothika
இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளில் கலக்கி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக இவர் நடித்த காதல் தி கோர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இந்தியில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் உடன் சைத்தான் என்கிற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்துள்ளது.
Jyothika Reply to Suriya Fan Girl
சைத்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தில் பணியாற்றியபோது எடுத்த புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக பதிவிட்டு இருந்தார் ஜோதிகா. அந்த பதிவில் கமெண்ட் செய்திருந்த நடிகர் சூர்யாவின் ரசிகை ஒருவர், சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிடம் ஒரு நாளைக்கு மட்டும் சூர்யாவை கொடுத்தது போல் எனக்கும் தருவீர்களா என ஜோதிகாவிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதோடு 15 ஆண்டுகளாக சூர்யாவின் தீவிர ரசிகை என குறிப்பிட்டு இருந்தார். இதைப்பார்த்த ஜோதிகா, அதற்கு அனுமதிக்கவே மாட்டேன் என ஸ்டிரிக்டாக சொல்லி ரிப்ளை செய்திருந்தார். இந்த பதிவு செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Inimel Song : கமல் மகளுடன் கண்டமேனிக்கு ரொமான்ஸ் செய்த லோகேஷ் கனகராஜ்... பங்கமாக கலாய்த்த விக்ரம் பட நடிகை