Dayanidhi Azhagiri : மருத்துவமனையில் துரை தயாநிதி அழகிரி.! இமெயிலில் வந்த ஷாக் தகவல்- அலர்ட்டான போலீஸ்
உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரிக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
dayanidhi azhagiri
தயாநிதி அழகிரி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் அழகிரி, இவர் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளார். இவரது மகன் துரை தயாநிதி, தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர் பல ஹிட் படங்களை தயாரித்தும், வெளியிடவும் செய்துள்ளார்.
durai dayanidhi
மருத்துவமனையில் சிகிச்சை
கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததால் தலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் 4 மாதங்கள் வரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள ஏ-பிளாக்கில் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
durai dayanidhi
கொலை மிரட்டல் கடிதம்
இந்தநிலையில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆகஸ்ட் 10) மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் தொடர்பாக எச்சரிக்கை இருந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் மின்னஞ்சல் வந்த முகவரி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
durai dayanidhi
பாதுகாப்பு அதிகரிப்பு
மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் உள்ள ஏ பிளாக்கில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.