Never.. Ever.. Give Up.. வெறும் வார்த்தையாக அல்ல.. விடாமுயற்சியால் வென்ற பிரபலங்கள் - வெற்றி பட்டியல் இதோ!
Most Successful Celebrities : குடும்ப சூழ்நிலை, பணம், பதவி என்ற எதுவும் தேவையில்லை, ஆனால் உண்மையான உழைப்பு இருந்தால் மட்டுமே போதும் என்று நிரூபித்த சில சிறந்த செலிபிரிட்டிஸ் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Shah Ruk Khan
ஷாருகான்.. இன்று உலக சினிமா அரங்கில், இந்திய சினிமாவின் முகமாக கருதப்படும் பாலிவுட் உலகின் பாட்ஷா தான் ஷாருகான். மாபெரும் நடிராக இருக்கும் இவர் பல அவமானங்களையும் தடைகளையும் கடந்து வந்த ஒரு மனிதன் தான். சின்னத்திரை நடிகராக தனது வாழ்க்கையை துவங்கி ஷாருக், அதற்கு முன்னதாக பல சிறு சிறு வேலைகளை செய்து தனது வாழ்க்கையை நடத்தியவர் தான்.
விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? பிரேமலதாவை தொடர்ந்து அமைச்சர் சொன்ன ஹெல்த் அப்டேட்
Dirubai Ambani
திருபாய் அம்பானி.. இன்று அம்பானியின் குடும்பத்திற்கு உலக அளவில் அறிமுகம் தேவையில்லை. தவணை முறையில் பொருட்களை விற்று தனது வாழ்க்கையை துவங்கிய திருபாய் அம்பானியின் மகன் முகேஷ் அம்பானி தான் இந்தியாவின் முதல் பணக்காரர். இவருடைய சொத்து மதிப்பே லட்சம் கோடிகளை தொடும் என்றால், அவர்களுடைய குடும்ப சொத்து மதிப்பு கேட்டால் நமக்கு தலை சுற்றும். பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் தனது பயணத்தை துவங்கிய திருபாய் அம்பானி, இன்று மாபெரும் ரிலையன்ஸ் சாம்பிராஜ்யத்தின் முதலாளி ஆவார்.
Thala Dhoni
தல தோனி.. சிறு வயது முதல் Foot Ball மேல் கொண்ட ஆர்வம் நாளடைவில் அவருக்கு கிரிக்கெட் மீது மாறியது. 2001ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை, இந்திய ரயில்வேயில் TTEயாகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பம் தான் என்றபோது, அவற்றிடையே இருந்த விடாமுயற்சியும், உழைப்பும் அவரை இன்று உலக அரங்கில் தல என்ற அந்தஸ்திற்கு கொண்டு சென்றுள்ளது. பணக்கார கிரிக்கெட் வீரரான அவருடைய சொத்து மதிப்பு சுமார் 1000 கோடி.
Super Star Rajinikanth
ரஜினிகாந்த்.. "அவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைத்தனடா" என்ற பாடலுக்கு தகுதியான ஒரு மனிதன். வெள்ளை நிறம் தான் நடிப்புக்கு ஏற்றது என்ற ஒரு சொல்லை தவிடுபொடியாகிய ஒரு மிகசிறந்த நடிகன். கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக தனது பயணத்தை துவங்கிய அந்த சிவாஜி ராவ் கேக்வாட், தனது 25வது வயது முதல் நடிக்க துவங்கி, இன்று தனது 72 வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மாபெரும் புகழோடு, சிறந்த கலைஞனாக விளங்க ஒரே காரணம் அவருடைய ஈடு இணையற்ற உழைப்பு மட்டுமே.