கோலி 4, ஸ்கை 7, துபே 3, ஜடேஜா 0; தட்டு தடுமாறி 119 ரன்கள் எடுத்த இந்தியா – பாகிஸ்தான் அபார பவுலிங்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 19ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
IND vs PAK, T20 World Cup2024
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 19ஆவது போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
IND vs PAK, T20 World Cup2024
முதல் ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மழை குறுக்கீடு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இதில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 13 ரன்களில் நடையை கட்டினார். முதல் 6 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்திருந்தது.
IND vs PAK, T20 World Cup2024
நான்காவதாக வந்த அக்ஷர் படேல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் முறையே 11, 18, 13, 15 மற்றும் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களில் நடையை கட்டினார்.
IND vs PAK, T20 World Cup2024
கடைசியா சில போட்டிகளில் ஷிவம் துபே முறையே 0, 0, 21, 18, 7, 14, 0*, 3 என்று சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
IND vs PAK, T20 World Cup2024
துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் ஆட்டமிழக்கவே, ஜஸ்ப்ரித் பும்ராவும் கோல்டன் டக் முறையில் நடையை கட்டினார். கடைசியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இறுதியில் அர்ஷ்தீப் சிங் 9 ரன்களில் ஆட்டமிழக்க 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமெ எடுத்தது.
IND vs PAK, T20 World Cup2024
பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா மற்றும் ஹரீஷ் ராஃப் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முகமது அமீர் 2 விக்கெட்டுகள் எடுக்கவே ஷாஹீன் அஃப்ரிடி ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தார்.