MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • என் பொண்டாட்டியோட பழகுவதை இத்தோட நிறுத்திக்கோ சொன்ன கணவர்.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த பயங்கரம்.!

என் பொண்டாட்டியோட பழகுவதை இத்தோட நிறுத்திக்கோ சொன்ன கணவர்.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த பயங்கரம்.!

மனைவியுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் செல்வம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 23 2023, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Illegal love and fire

Illegal love and fire

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ரெட்டியா தெருவைச் சேர்ந்தவர்  வினாயகம் மகன் செல்வம்(55). இவருக்கு  திருமணமாகி சத்தியா என்ற மனைவியும் திலீப், பாபு  ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வம் மினி லாரியில்  வைக்கோல் ஏற்றி வந்து விற்பனை செய்து வருகிறார். வீரகனூர் இராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் செல்வராஜ் (58). இவர் வீரகனூர் பேருந்து நிலையத்தில் பேன்சி ஸ்டோர் டெய்லரிங் கடை வைத்து  நடத்தி வருகிறார். 

24

இந்நிலையில் செல்வத்தின் மனைவி சத்தியா (46)  செல்வராஜின் பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார்.  இதனால் செல்வராஜிக்கும் சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளகாதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த  செல்வராஜின் மனைவி தாரா கண்டித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாலி கட்டிய மனைவி என்று கூட பாராமல் தாராவை கொலை செய்துள்ளார். 

இதையும் படிங்க;- தனிமையில் இருந்த அண்ணி! க்ரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்! பழிவாங்க மகனையே கொன்ற சித்தப்பா! பகீர் தகவல்.!

34

கொலை செய்த குற்றத்திற்காக சிறையிலிருந்து தற்போது ஜாமினில் வெளியே வந்த செல்வராஜியிடம்  எனது மனைவி சத்யாவுடன் பேசக்கூடாது என செல்வம்  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  செல்வராஜ்  செல்வத்தை கொலை செய்ய  திட்டம் தீட்டியுள்ளார்.  இந்நிலையில் நேற்று  வீரகனூர் பேருந்து நிலையம்  பேன்சி ஸ்டோர்  முன்பு நின்றுகொண்டிருந்த செல்வத்தை செல்வராஜ் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் தலையில் பலமாக தாக்கி பின்னர்  சரமாரியாக வெட்டியுள்ளார்.  இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் உயிருக்கு போராடி மருத்துவ உதவி கிடைக்காமல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

44


இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வம் உடலை கைப்பற்றி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளி செல்வராஜ் வீச்சருவாளுடன் வீரகனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved