தனிமையில் இருந்த அண்ணி! க்ரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்! பழிவாங்க மகனையே கொன்ற சித்தப்பா! பகீர் தகவல்.!
ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க இரண்டு வயது குழந்தையை கொழுந்தன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 17ம் தேதி வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமாகினார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் காணாமல் போன இரண்டு வயது சிறுவன் திருமூர்த்தி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தாய் அழுது கதறி துடித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரித்த போது சித்தப்பாவே குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜேஷ் அளித்த வாக்குமூலத்தில் அண்ணன் குருமூர்த்தி பெங்களூருவில் லோட் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தம்பி ராஜேஷ் பெங்களூருவில் கொஞ்சம் நாட்களும், சொந்த ஊரில் கொஞ்சம் நாட்களும் இருந்து வந்துள்ளார். தனிமையில் இருந்த அண்ணியை ராஜேஷ் அடைய ஆசைப்பட்டுள்ளார். அவரிடம் பலமுறை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கெஞ்சியும், மிரட்டியும் உள்ளார். ஆனால், இதற்கு ஜெகதீஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து, அவருடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த ஜெகதீஸ்வரியை பழிவாங்க நினைத்து 2 வயது குழந்தையை கழுத்தை நெறித்தும், சுவற்றில் அடித்தும் கொலை செய்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸில் சிறுவனின் சடலத்தை வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வெளியே சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.