குழந்தைகள் கண்முன்னே ஸ்க்ரூ ட்ரைவரால் மனைவியை குத்திக்கொலை செய்த கணவர்.. என்ன காரணம் தெரியுமா?
குடும்ப தகராறில் குழந்தைகள் கண்முன்னே மனைவியை ஸ்க்ரூ ட்ரைவரால் கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை அடுத்துள்ள ஷாலிமார்ஷா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஹேஜாஸ்கான் (35). இவரது மனைவி குரேஷாபானு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அஹேஜாஸ்கான் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சகோதரி குரேஷாபானு வறுமையால் கஷ்டப்படுவதை அறிந்த சகோதரர்கள் அஹேஜாஸ்கானுக்கு சொந்த செலவில் ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் குரேஷாபானுவை தங்களது வீட்டிற்கு அருகிலேயே குடிவைத்துள்ளனர். இருப்பினும், போதிய வருமானம் இல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை, கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஹேஜாஸ்கான் தனது ஆட்டோவில் வைத்திருந்த ஸ்க்ரூ ட்ரைவரால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தை சம்பவம் தொடர்பாக தாய் மாமன்களிடம் கூறினர். என்ன ஆச்சோ ஏது அச்சோ என்ற அலறியடித்துக்கொண்டு வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் குரேஷாபானு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத அடுத்து தலைமறைவாக இருந்த அஹேஜாஸ்கானை கைது செய்துள்ளனர்.