வெள்ளை சட்டையில் இருக்கும் விடாப்படியான கறையை சுலபமாக நீக்க 4 டிப்ஸ்!!
Stains From White Clothes : வெள்ளை ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறையை சுலபமாக நீக்க உதவும் சிம்பிளான டிப்ஸ் இங்கே.
பொதுவாகவே பலரும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிய விருபுவார்கள். காரணம் அனைவருக்கும் அந்த நிறம் மிகவும் பொருந்தக் கூடியதாக இருக்கும்.
ஆனால், சிலர் இந்த நிறத்தில் ஆடை அணிவதை தவிர்ப்பார்கள். காரணம், இந்த நிற ஆடையில் எளிதில் கறைகள் ஒட்டிக் கொள்ளும் மற்றும் அவற்றை போக்குவது மிகவும் கடினம்.
இத்தகைய சூழ்நிலையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால் போதும் வெள்ளை ஆடைகளில் இருந்து கரைகளை எளிதில் அகற்றி விடலாம். அவை..
சூடான நீர் : வெள்ளை ஆடையில் கறைகள் இருந்தால் உடனடியாக சூடான நீரில் சிறிது நேரம் வைத்து பிறகு துவைத்தால், பிடிவாதமான கறைகள் உடனே நீங்கிவிடும். ஒருவேளை சில கறைகள் இன்னும் இருந்தால், சூடான நீரில் சோப்பு நீர் கலந்து சுமார் 10 நிமிடம் ஊற வைத்து பிறகு துவைக்க வேண்டும்.
இதையும் படிங்க: துணிகளை எத்தனை முறை வாஷ் பண்றீங்க? துவைக்காமலே அணியும் டிரஸ் தெரியுமா?
எலுமிச்சை : டீ, காபி, ஊறுகாய் போன்றவற்றை வெள்ளை ஆடையில் விழுந்தால், அவற்றை நீக்க எலுமிச்சை பயன்படுத்தலாம். இதற்கு கரை மீது எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதன் ஒரு துண்டை கறை படிந்த இடத்தில் தேய்க்கவும் கறைகள் படிப்படியாக மறைந்துவிடும்.
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா : வெள்ளை ஆடையில் இருக்கும் விடாப்படியான கரையை நீக்க பேக்கிங் சோடாவில் சில துளிகள் வினிகர் கலந்து அதை வைத்து கறையை சுத்தம் செய்தால், கறை உடனே நீங்கும்.
இதையும் படிங்க: மங்கிய வெள்ளை ஆடைகள் பளிச்சினு மாறணுமா? துவைக்கும்போது இந்த மாத்திரை பயன்படுத்தினால் கறைகளே இருக்காது
வெள்ளை வினிகர் : சூடான நீரில் வெள்ளை வினிகரை சேர்த்து பிறகு கறை படிந்த துணியை இரவு முழுவதும் அதில் ஊற வைத்து, மறுநாள் காலை வழக்கம் போல் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.