ஒரு பைசா செலவில்லாமல் நிரந்தரமாக மருக்கள் உதிர எளிய வழிகள் இதோ!!
Home Remedies For Warts : உங்கள் அழகை கெடுக்கும் மருக்கள் உடனடியாக நீங்க இங்கே சில எளிய வீட்டு வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
நம்மில் பலருக்கு கை, கால், விரல்கள், அக்குள், முகம், கழுத்து என எல்லா இடங்களிலும் பருக்கள் இருக்கும். இது வலியை கொடுக்காது; தீங்கு விளைவிக்காது. ஆனால் அவை பார்ப்பதற்கு அசிங்கமாகவும், அழகையும் கெடுக்கும்.
மருக்கலானது கொலாஜனும் இரத்த நாளங்களும் ஒன்று சேர்வதால் தான் உருவாகிறது. இதை அறுவை சிகிச்சை செய்து கொடு நீக்கிவிடலாம். ஆனால், எந்த செலவுமின்றி, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நீக்கிவிடலாம். இதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
பூண்டு : பூண்டின் தோலை உரித்து, அதிலிருந்து சாற்றை எடுத்து, மருவில் தடவு வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலே மரு விழுந்து விடும்.
வெங்காயம் மற்றும் பூண்டு : மருக்களை நீக்க வெங்காயம் மற்றும் பூண்டின் சாற்றை ஒன்றாக கலந்து அதை மருக்கள் மீது தொடர்ந்து தடவி வந்தால், மருக்கள் இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: பிறப்புறுப்பு பகுதியில் பருக்கள் தோன்றுவதற்கான 5 காரணங்கள்..!!
ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகரை தொடர்ந்து மருக்கள் மீது தடவி வந்தால் அது காய்ந்து தானாகவே விழுந்து விடும்.
இதையும் படிங்க: மருக்கள் உடனே உதிர்ந்து போக இந்த 1 துளியை வைத்தால் போதும்!! வாழ்நாளில் 'மருக்கள்' வரவே வராது!!!
உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கு சாற்றை மருக்கள் மீது தினமும் தடவி வந்தால் 3-4 நாட்களுக்குள் அது உதிர ஆரம்பிக்கும்.