Tamilnadu Rain: இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்..!
தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைப்பதும், மாலை அல்லது இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில்,
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தஞ்சை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.