Mudra Loan : ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

முத்ரா கடன் திட்டத்தின் நன்மைகள், இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

How to apply Mudra Loan Central govt mudra loan benefits eligibility, interest rate all details in tamil Rya

ஏழை மற்றும் நடுத்தர மகக்ளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு நிதியதவி அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முத்ரா கடன்

இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். சாமானிய மக்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையிலும், சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்துடன்  இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 3 வகைகளில் கடன்கள் வழங்கப்படுகிறது. அதன்படி சிஷு என்ற வகையில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற வகையின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்ற வகையின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன்களை பெற்ற பிறகு 3 அல்லது 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

வருமான வரி தாக்கல்.. படிவம் 16 எப்போது வழங்கப்படும்? முக்கியமாக செய்ய வேண்டியவை என்ன?

பொதுவாக எந்த உத்தரவாதமும் இன்றி கடன்கள் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இந்த திட்டத்தில் எந்த உத்தரவாதமும் தேவையில்லை. பொதுவான தகவல்களை ஆவணங்களுடன் இணைத்து கொடுத்தால் போதும். உங்கள் தொழில் தொடர்பான திட்ட அறிக்கை மற்றும் எதிர்கால வருமான கணிப்புகள் ஆகிய விவரங்களை வங்கிகள் கேட்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் முத்ரா கடன்களை வழங்குகின்றன. இந்த வங்கிகளில் முத்ரா கடனுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். கடன் வாங்க விரும்புவோர் அந்த விண்ணப்பங்களை பெற்று அடையாள சான்று, இருப்பிட சான்று, இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான சான்று, புகைப்படம், தொழிற்சாலை இருக்கும் போன்ற விவரங்களை சேர்த்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். உங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒரு மாதத்திற்குள் வங்கிகள் கடன் வழங்கும். 

முத்ரா கடனை விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 65 வயது வரை எந்த நிதி நிறுவனத்துடனும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பெறலாம். மற்றும் நல்ல திருப்பிச் செலுத்துதல் வரலாறு. முத்ரா கடனை தனிநபர்கள், சுயதொழில் செய்பவர்கள், வணிக உரிமையாளர்கள், பெண் தொழில்முனைவோர், MSMEகள் மற்றும் சேவைகள், வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள பிற வணிக நிறுவனங்கள் மூலம் பெறலாம்.

முத்ரா கடன்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தனிநபர்கள், தொடக்க நிறுவனங்கள், வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறுகுறு தொழில்நிறுவனங்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள், கடைக்காரர்கள், விற்பனையாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகம், சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ள பிற வணிக நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், அத்துடன் SC/ST/OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்த முத்ரா கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கு ஏற்ற சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் தெரியுமா?

தேவையான ஆவணங்கள்

  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், பயன்பாட்டு பில்கள் (தண்ணீர் மற்றும் மின்சாரம்) போன்ற விண்ணப்பதாரரின் KYC ஆவணங்கள்
  • எஸ்சி/எஸ்டி/ஓபிசி/சிறுபான்மையினர் போன்ற சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்று.
  • வணிக முகவரி ஆதாரம்
  • கடந்த 6 மாத வங்கி அறிக்கை
  • வங்கி/NBFC க்கு தேவைப்படும் வேறு எந்த ஆவணமும்
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios