MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இன்று ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அஜித்... ஒரு ரூபா கூட காசு வாங்காமல் நடித்த படம் எது தெரியுமா?

இன்று ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அஜித்... ஒரு ரூபா கூட காசு வாங்காமல் நடித்த படம் எது தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2024, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ajith Kumar

Ajith Kumar

தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இன்றி அறிமுகமாகி, இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஓரிரு மாதத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

24
Ajith Movie LineUp

Ajith Movie LineUp

விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த கையோடு, தன்னுடைய அடுத்த படத்தின் பணிகளை தொடங்க உள்ளார் அஜித். அவர் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். அப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... சூர்யாவின் கங்குவா படத்துக்கு கிடைத்த லைப் டைம் செட்டில்மெண்ட்- ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

34
Ajith salary

Ajith salary

தற்போது அஜித் கைவசம் உள்ள இந்த இரண்டு படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட் படங்களாகும். இந்த இரண்டு படங்களில் நடிப்பதற்காக ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வீதம் இருநூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார் அஜித்குமார். இப்படி ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நடித்து வரும் அஜித், ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.

44
English Vinglish

English Vinglish

அஜித் சம்பளமே வாங்காமல் நடித்த படம் இங்கிலிஷ் விங்கிலிஷ். ஸ்ரீதேவி கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் நடிகர் அஜித் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். அந்த சிறிய ரோலில் நடிப்பதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம். நடிகை ஸ்ரீதேவி மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாகவே அஜித் இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Japan Flop : ஜப்பான் படம் அட்டர் பிளாப் ஆனதற்கு நடிகர் கார்த்தி தான் காரணமா? புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved