Gold Price Today : மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.! ஒரு கிராமுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா.?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமையை விட இன்று சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் மீதான ஆர்வம்
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே உலகத்திலையே அதிக அளவு தங்கம் விற்பனை செய்யும் மையமாக இந்தியா உள்ளது. குறிப்பாக நிலத்திலும் தங்கத்திலும் இந்திய மக்கள் முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்த இரண்டின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் எனவே அதில் முதலீடு செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
gold rate
இந்தியாவில் குறையாத தங்கம் விற்பனை
மேலும் தங்கள் பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்திய மக்கள் பெரும்பாலும் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை எவ்வளவு ஏறினாலும் அதன் விற்பனை மட்டும் இந்தியாவில் குறைவதில்லை.
இனி டெபாசிட் கணக்கில் 4 நாமினிகளை சேர்க்கலாம்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
தங்கத்திற்கு வரி குறைப்பு
இந்தநிலையில் தான் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதையடுத்து தங்கம் விலையானது கடந்த மாதம் கிடு, கிடுவென குறைந்தது. இரண்டே நாட்களில் 3ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை சரிந்தது. இந்தநிலையில் மீண்டும் சற்று தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தங்கம் விலை என்ன.?
அந்த வகையில், தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை கிராம ஒன்றுக்கு 6450 சவரன் ஒன்றுக்கு 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது அந்த வகையில் கிராமுக்கு ரூ. 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,470யும். சவரன் ஒன்றுக்கு 51 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையானது 22 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்று 7,058 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. எனவே வரும் நாட்களில் சர்வசேத சந்தையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.