Tirumala Tirupati Devasthanam: திருப்பதியில் இலவச தரிசனம் திடீர் ரத்து.. என்ன காரணம் தெரியுமா?
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதியில் இன்று காலை வரை இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tirumala Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்து மட்டுமல்லாமல் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வருகிறது.
Tirumala Tirupati Devasthanam
இதனிடையே திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு காம்பளக்சில் உள்ள 32 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர். இதனால் இலவச நேரடி தரிசனத்திற்கு 30 நேரத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tirumala Tirupati: திருப்பதி போற பிளான் இருக்கா? அப்படினா.. இதோ முக்கியமான செய்தி!
Tirupati Free Darshan
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் இன்று காலை வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.