- Home
- Gallery
- கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் நயன்தாரா மகன்கள்... அழகில் அம்மாவை மிஞ்சிய உயிர், உலகத்தின் கியூட் போட்டோ இதோ
கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் நயன்தாரா மகன்கள்... அழகில் அம்மாவை மிஞ்சிய உயிர், உலகத்தின் கியூட் போட்டோ இதோ
நடிகை நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் எடுத்துக் கொண்ட கியூட்டான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Nayanthara sons
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்தாண்டு ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இந்த ஜோடிக்கு இரட்டைக் குழந்தைகள். நாலு மாசத்துல குழந்தையா எப்புட்ரா என ஷாக் ஆன ரசிகர்களுக்கு, தாங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்து ஷாக்கை குறைத்தது விக்கி - நயன் ஜோடி.
Lady superstar Nayanthara
இதையடுத்து தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை குழந்தைகளோடு கொண்டாடினாலும், அப்போது மகன்களின் முகத்தை மறைத்து தான் புகைப்படங்களை வெளியிட்டு வந்தா விக்கி. பெயரையும் நீண்ட நாட்களாக சீக்ரெட்டாகவே வைத்திருந்த இந்த ஜோடி, ஒரு விருது விழாவில் தான் முதன்முறையாக தங்களது மகனின் பெயரை அறிவித்தனர். அதன்படி உயிர் ருத்ரோநீல், உலக் தெய்விக் என தனது இரட்டை குழந்தைகளுக்கு தமிழ், பெங்காலி கலந்து பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார் நயன்.
இதையும் படியுங்கள்... அமெரிக்க பிரபலத்தின் மனைவி உட்பட இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ பண்ணும் 5 முக்கிய பிரபலங்கள் ?
Nayanthara Twin Babies
பெயர் அறிவித்த பின்னரும் மகன்களின் முகத்தை காட்டாமல் இருந்து வந்த இந்த ஜோடி, இன்று முதன்முறையாக மகன்களின் முகத்தை வெளி உலகத்துக்கு காட்டி உள்ளது. இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை நயன்தாரா, தன் இரு மகன்களை இடுப்பில் தூக்கி வைத்து நடந்து வந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் நயன்தாரா பதிவிட்ட அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
Nayanthara sons first Photo
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதில் தன் மகன்களை போல் தானும் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் நயன். அதில் நயன்தாரா மகன்கள் இருவரும் கொழு கொழுவென செம்ம கியூட்டாக உள்ளனர். அந்த போட்டோ பார்த்த ரசிகர்கள், கண்ணுபட்ற போகுது முதலில் குழந்தைக்கு சுத்திப்போடுங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மகன்களின் முகத்தை முதன்முறையாக காட்டி... இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நயன்தாரா - முதல் ஆளாக பாலோ பண்ணிய விக்கி