- Home
- Gallery
- Aarthi About Vadivelu: வடிவேலு ஒரு.! கோவை சரளாவையும் என்னையும் அப்படி செஞ்சாரு.. முகத்திரையை கிழித்த ஆர்த்தி!
Aarthi About Vadivelu: வடிவேலு ஒரு.! கோவை சரளாவையும் என்னையும் அப்படி செஞ்சாரு.. முகத்திரையை கிழித்த ஆர்த்தி!
பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, நடிகர் வடிவேலு பற்றி பேசியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி நடிகர்கள் பல பேர் இருந்தாலும், காமெடி நடிகை என தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ளது ஒரு சிலரே... ஆச்சி மனோரம்மா, கோவை சரளா, ஆர்த்தி, வித்யூலேகா, ஜாங்கிரி மதுமிதா என காமெடி நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் கூட, அவர்களால் இதுவரை ஒரு நிலையான இடத்தை எட்டமுடியவில்லை.
இந்நிலையில், நடிகர் வடிவேலு முகத்திரையை கிழிக்கும் நோக்கத்தில்... பிக்பாஸ் பிரபலமும் காமெடி நடிக்கையுமான ஆர்த்தி கூறியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்த்தி கணேஷ், வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஆர்த்தி நடிகர் வடிவேலுவுடன் ஒரு அருள், கிரி, கச்சேரி, வில்லு, கத்தி சண்டை, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அப்படி ஒரு படத்தில் நடிக்கும் போது ஆர்த்தியை அழைத்த வடிவேலு நீ நல்லா நடிக்கிறாய் என பாராட்டியுள்ளார்.
அப்படி வடிவேலு அழைத்து பாராட்டும் அளவுக்கு நடித்துவிட்டால்... அந்த படத்தில் அவர்களுக்கு காட்சி இருக்காது. தன்னை விட யாரும் நல்லா நடிக்க கூடாது, என நினைப்பவர் வடிவேலு என தெரிவித்துள்ளார்.
அதே போல் அவர் நடிக்கும் படங்களில், தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பட வாய்ப்பு கொடுப்பார். 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும், என்னையும் இயக்குனர் சிம்புதேவன் கமிட் செய்தார். ஆனால் வடிவேலு, அவுங்க எல்லாம் பார்த்த முகங்கள் அதனால் இந்த படத்தில் அவங்க நடிக்க வேண்டாம்... என கூறி அந்த படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார்.
ஆனால் அந்த படம் டேக் ஆஃப் ஆகவே இல்லை என கூறியுள்ள ஆர்த்தி, வடிவேலு ஒரு பாம்பு மாதிரி என கூறி அவரின் முகத்திரையை கிழித்துள்ளார். ஏற்கனவே... பலர் வடிவேலுவின் குணம் குறித்தும், அவரால் படவாய்ப்பு பறிபோனது குறித்தும் கூறியுள்ள நிலையில்... ஆர்த்தி போன்ற பிரபலமான நடிகைகள் கூட வடிவேலுவால் நசுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.