வெற்றிகரமாக 500 எபிசோடுகளை நிறைவு செய்து சாதனை படைத்த 'எதிர்நீச்சல்' சீரியல்! கேக் வெட்டி கொண்டாடிய குழுவினர்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடர் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை நிறைவு செய்த நிலையில், இதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சன் டிவி தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், குறிப்பிட்ட தொடர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் நிலையான இடத்தை பிடித்து விடுகிறது. அந்த வகையில், ஆணாதிக்கத்துக்கு எதிராக ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'.
இந்த தொடர் துவங்கப்பட்ட போது, சில விமர்சனங்களை சந்தித்தது. பலர் இந்த காலத்திலும் இது போன்ற மனநிலையில் இருப்பவர்கள் இல்லை என, இயக்குனர் திருச்செல்வத்திடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி... இதில் வரும் காட்சிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க, இதற்க்கு விளக்கம் கொடுத்த திருச்செல்லாம், இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து, நான் உணர்ந்த சில விஷயங்களை தான் சீரியலாக எடுத்துள்ளேன் என்றும் கூறினார்.
மேலும் ஒவ்வொரு வாரமும், இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே போல் சர்வதேச அளவில் ஹிஜாப் அணிந்து நடிக்க அனுமதி கொடுத்த முதல் சீரியல் என்கிற பெருமையும் இந்த சீரியலுக்கு உண்டு. இந்த தகவல் பல ஆங்கில நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது 500-ஆவது எபிசோடை எட்டியுள்ளது. இதை சீரியல் குழுவினர், கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.