Vijay Flop Movie : படம் கன்பார்ம் பிளாப் ஆகும்னு தெரிஞ்சும்... தளபதி விஜய் நடிச்ச படம் எது தெரியுமா?
நடிகர் விஜய், தான் நடிக்கும் படம் பிளாப் ஆகும் என தெரிந்தும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார், அது எந்த படம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் விஜய் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக பிளாப் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்துவிடும். இதனால் அவர் மீது பணத்தை கொட்டி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் லைனில் காத்திருக்கின்றனர். இந்த அளவுக்கு டிமாண்ட் இருந்தாலும், தான் சினிமாவை விட்டு விலகி அரசியலில் பயணிக்க உள்ளதாக நடிகர் விஜய் முடிவெடுத்துள்ளது கோலிவுட்டுக்கே அதிர்ச்சியான செய்தி தான்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாப் ஆன படங்கள் மிகவும் குறைவு, அதில் ஒரு படத்தில் நடிக்கும் போதே அப்படத்தின் காட்சிகளில் தனக்கு திருப்தி இல்லாததால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிய விஜய், படத்தை நிறுத்திவிடலாம் எனவும் ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்க மறுத்து, தற்போது படத்தை நிறுத்தினால் அந்த இயக்குனரின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் எனக்கூறி தொடர்ந்து நடிக்க அறிவுறுத்தினாராம்.
இதையும் படியுங்கள்... Aranmanai 4 : அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி
படம் பிளாப் ஆகுமென தெரிந்தும் விஜய் அப்படத்தில் நடித்திருக்கிறார். படம் முடிந்து அதிலிருந்து பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. ஆனால் விஜய் நினைத்தபடி படம் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. அந்தபடம் வேறெதுவுமில்லை அது சுறா தான். நடிகர் விஜய்யின் 50-வது படமான இதை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி இருந்தார். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
சுறா படம் தான் நடிகர் விஜய்யின் 50-வது படமாகும். மேலும் இப்படத்தை சங்கிலி முருகன் என்கிற தயாரிப்பாளர் தான் தயாரித்து இருந்தார். அவர் சொன்னதால் தான் படம் பிளாப் ஆகும் என தெரிந்தும் அதில் நடித்திருக்கிறார் விஜய். சுறா படம் பிளாப் ஆனாலும் அதில் இடம்பெற்ற பாடல் காட்சிகளும் நகைச்சுவை காட்சிகளும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் நடிகை தமன்னாவும் சுறா படத்தில் நடிக்கும் போதே அது பிளாப் ஆகும் என தெரிந்ததாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 1500 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு 60 வயது நடிகருக்கு கழுத்தை நீட்டிய 44 வயது நடிகை - அதுவும் 4-வது மனைவியாக..