அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த மோனன்க் படேல் – பாகிஸ்தானுக்கு சிக்கலோ சிக்கல்!
அமெரிக்கா அணியின் கேப்டன் மோனன்க் படேல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
United States vs Pakistan, T20 World Cup 2024
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் 11ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் 159 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுக்கவே போட்டி டிரா ஆனது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரில் அமெரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
United States vs Pakistan, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் அமெரிக்கா அணியின் கேப்டனான மோனன்க் படேல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். மோனன்க் படேல் குஜராத்தைச் சேர்ந்தவர். இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த 1993 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அனந்த் என்ற பகுதியில் பிறந்த மோனன்க் படேல் அந்த மாநில அண்டர் 16 மற்றும் அண்டர் 18 அணிக்காக விளையாடினார்.
United States vs Pakistan, T20 World Cup 2024
இதையடுத்து 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற மோனன்க் படேல், கிரீன் கார்டு பெற்று அமெரிக்கா சிட்டிசனாக மாறினார். அதன் பிறகு அமெரிக்கா உள்ளூர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி கடைசியில் அமெரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடும் வாய்ப்பு பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டி20 தகுதிச் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்த தொடரில் 6 போட்டிகள் விளையாடி 208 ரன்கள் குவித்தார்.
United States vs Pakistan, T20 World Cup 2024
இந்த நிலையில் தான் 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், அமெரிக்கா அணிக்காக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றினார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.