MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அவ்வளவு பேர் மத்தியில் பெண் காவலர் மீது தாக்குதல்! திமுக பிரமுகர் ஸ்ரீதரை கைது செய்யுங்கள்! நாராயணன் திருப்பதி

அவ்வளவு பேர் மத்தியில் பெண் காவலர் மீது தாக்குதல்! திமுக பிரமுகர் ஸ்ரீதரை கைது செய்யுங்கள்! நாராயணன் திருப்பதி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கிய திமுக முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரை கைது செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Dec 30 2023, 10:51 AM IST| Updated : Dec 30 2023, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Narayanan Thirupathy

Narayanan Thirupathy

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் திமுகவின் செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதர் என்ற நபர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கியது வன்முறை வெறியாட்டத்தின் உச்சக்கட்டம். 

24
DMK

DMK

ஆட்சியில் அமர்ந்தால் திமுகவினரின் அராஜகம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கான சான்று. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த கோவிலில் இந்த தாக்குதல் நடைபெற்ற நிலையில், மூன்று நாட்களாகியும் இதுவரை அந்த நபர் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. காவல் துறையை சேர்ந்த ஆய்வாளருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் திமுகவினரால் நிலவுகிறது. 

34
tiruvannamalai

tiruvannamalai

சாதாரண முகநூல் பதிவுகளுக்கே நட்ட நடு நிசியில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறை இதுவரை ஸ்ரீதரை கைது செய்யாது இருப்பது, காவல் துறையை பலவீனமாக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறை தன் கண்ணியத்தை, மாண்பை, மரியாதையை தக்க வைத்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு  அவர்கள் இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

44
EV Velu

EV Velu

அது உண்மையெனில், திமுகவை சேர்ந்தவர் என்பதற்காக அவரை பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு தமிழகத்தின் அமைச்சராக தன் கடமையை, பொறுப்பை உணர்ந்து ஸ்ரீதரை கைது செய்ய அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தாக்குதல்
பிஜேபி
திமுக
திருவண்ணாமலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved