MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • துருவ நட்சத்திரம் முதல் பில்டப் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

துருவ நட்சத்திரம் முதல் பில்டப் வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

நவம்பர் 24-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் தமிழ் படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 22 2023, 11:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Theatre Release Movies

Theatre Release Movies

தமிழ் சினிமாவில் இந்த மாதம் தீபாவளி பண்டிகை வந்ததால் அதையொட்டி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ஜப்பான் பிளாப் ஆனதால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மட்டுமே கடந்த இரு வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்தன. தற்போது தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எண்ட் கார்டு போட இந்த வாரம் எக்கச்சக்கமான தமிழ் படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த படம் துருவ நட்சத்திரம். இப்படம் வருகிற நவம்பர் 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஹாரிஷ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரித்து வர்மா, ராதிகா, பார்த்திபன், திவ்யதர்ஷினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

38
ஜோ

ஜோ

விஜய் டிவி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் கலக்கி வரும் நடிகர் ரியோ நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் ஜோ. இப்படத்தை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கி உள்ளார். இப்படமும் நவம்பர் 24ந் தேதி திரைகாண உள்ளது.

48
80ஸ் பில்டப்

80ஸ் பில்டப்

கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப். சன் டிவி சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 24ந் தேதி திரைக்கு வர உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

58
குய்கோ

குய்கோ

அருள் செழியன் இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் குய்கோ. இப்படத்தில் வித்தார்த், வினோதினி, முத்துக்குமார், இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆண்டனி தாசன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் நவம்பர் 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

68
சில நொடிகளில்

சில நொடிகளில்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் சில நொடிகளில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படமும் வருகிற நவம்பர் 24-ல் திரைகாண உள்ளது.

78
காதல் தி கோர்

காதல் தி கோர்

மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் காதல் தி கோர். இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்துள்ளார். ஜோ பேபி இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 23-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

88
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரையரங்கில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆவதைப் போல் ஓடிடியிலும் எக்கச்சக்கமான படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நவம்பர் 24-ந் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆர்யா நடித்து தி வில்லேஜ் திரைப்படம் நவம்பர் 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.

பிரேம் ஜி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த சத்திய சோதனை திரைப்படம் நவம்பர் 24-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சித்தா திரைப்படம் வருகிற நவம்பர் 28-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved