பல போராட்டங்களை கடந்து வந்த தோனியின் மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் குழந்தைப்பருவ புகைப்படங்களை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
MS Dhoni Rare and Unseen Photos
கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. தான் ஒரு கிரிக்கெட் வீரராக வந்து இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை புரிவேன் என்று தோனி அப்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.
MS Dhoni Rare and Unseen Photos
ஆரம்பத்தில் கால்பந்து விளையாடி வந்த தோனி, கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்தி முதலில் விக்கெட் கீப்பராக பயிற்சியை மேற்கொண்டார். அதன் பிறகு பேட்டிங்கிலும் பயிற்சியை தொடங்கி உள்ளூர் போட்டிகளில் அதுவும் பீகார் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார்.
MS Dhoni Rare and Unseen Photos
அப்போது தான் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். முதலில் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக டிசம்பர் 23, 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி ஒரு பந்து தான் விளையாடினார். அந்தப் பந்திலேயும் ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும், அந்தப் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் சவுரவ் கங்கிலி தான் கேப்டனாக இருந்தார்.
MS Dhoni Rare and Unseen Photos
இதே போன்று டிசம்பர் 2, 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் தோனி 53 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனினும், இந்தப் போட்டி மோசமான வானிலை காரணமாக டிராவில் முடிந்தது. முதல் 3 நாட்கள் போட்டி மழை, மோசமான வானிலை காரணமாக நடக்கவில்லை. கடைசி 2 நாட்கள் மட்டுமே போட்டி நடந்தது.
MS Dhoni Rare and Unseen Photos
இதையடுத்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார். இந்தப் போட்டியிலும் தோனி 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி தனது கடைசி டி20 போட்டியில் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
MS Dhoni Rare and Unseen Photos
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 வரை ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக இருந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி, 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையும் கைப்பற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.