Armstrong murder : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் கைது - யார் இவர்.?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 22வது நபராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
வட சென்னையில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவர் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூரில் வைத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை தொடர்பாக காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்.
உண்மையான குற்றவாளி யார்.?
ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு இது காரணம் இல்லை, வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லையென்றும் பின்னனியில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டதையடுத்து மற்ற குற்றவாளிகள் உண்மையை சொல்ல தொடங்கினர். இதனையடுத்து பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
EPS ADMK : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு-! இது தான் காரணமா.?
Armstrong
21 பேர் கொலையாளிகள் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிலந்தி வலை போல பல இடங்களிலும் தொடர்பு உறுதியானது. பலரும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளனர். இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு, அருள் ராமு மற்றும் ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு எடுத்தனர்.
அஸ்வத்தாமன் கைது
அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் 22வது குற்றவாளியாக வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும் காங்கிரஸ் பிரமுகரமான அஸ்வத்தமனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தநிலையில் யார் இந்த அஸ்வத்தாமன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த அஸ்வத்தாமன்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் மாநில முதன்மை பொதுச்செயலாளராக உள்ளார். இவர் மீது பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதையடுத்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.