விஜய் டிவி தரப்புடன் மோதலா? நிகழ்ச்சிகளில் தலைகாட்டது ஏன்... உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த மைனா நந்தினி!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மைனா நந்தினிக்கு பிரேக் கொடுத்தது விஜய் டிவி சீரியலும், நிகழ்ச்சியும் தான் ஆனால் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே விஜய் டிவியில் தலை காட்டாதது ஏன் என கூறியுள்ளார்.
myna nandhini
கடந்த 2009 ஆம் ஆண்டு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. பின்னர் வம்சம், மின்சாரம், வெப்பம் ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
Myna Nandhini anchoring Shows
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவருக்கு, 2015 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கவும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் கிச்சன் சூப்பர் ஸ்டார், மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ், போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார்.
உடலோடு ஒட்டியபடி இருக்கும்... டைட் உடையில் அழகிய ஆரஞ்சி பழம் போல் போஸ் கொடுக்கும் ஹன்சிகா!
Myna Nandhini vijay tv serials
விஜய் டிவி மெட்டீரியலாகவே மாறி இருந்த மைனா நந்தினிக்கு, மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் விஜய் டிவி சீரியல் தான். மற்ற எந்த ஒரு கதாபாத்திரத்திலும் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மைனா கதாபாத்திரத்திற்கு கிடைத்தது. பின்னர் மைனா என்கிற பெயரே இவருக்கு அடையாளமாகவும் மாறியது.
Clash with vijay tv
இந்த சீரியலை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி சீசன் 3, சின்னதம்பி, அரண்மனைக்கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ், வேலைக்காரன், என தொடர்ந்து விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்தார். ஆனால் சமீப காலமாக விஜய் டிவியின் பக்கமே மைனாவை காணவில்லை. இதனால் விஜய் டிவி தரப்புக்கும், மைனா நந்தினிக்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என ஒரு தகவல் பரவியது.
myna nandhini about truth:
இது குறித்து, அண்மையில் மைனா நந்தினி கொடுத்தா பேட்டி ஒன்றில் அவரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது, இதற்கு மைனா நிந்தி... "எனக்கும் விஜய் டிவி தரப்புக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும், வெப் சீரியஸ் நடிக்கும் வாய்ப்புகளும் வந்து கொண்டிருப்பதால் விஜய் டிவியில் இருந்து தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்தால் என்னால் போக முடிவதில்லை என கூறியுள்ளார்.
myna nandhini busy with movies:
அதை தவிர்த்து எனக்கும், விஜய் டிவிக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அப்படி வெளியாகும் தகவலில் எந்த உண்மையையும் இல்லை என்பதையும் ஆணித்தனமாக கூறியுள்ளார். நந்தினி 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான சட்னி சாம்பார் என்கிற சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.