கமல்ஹாசனின் பிக்பாஸ் விலகலுக்கு பின்னணியில்... தளபதியின் அரசியல் நகர்வு? வேற வழியே இல்லாமல் எடுத்த முடிவு!
கமல்ஹாசனின் பிக்பாஸ் விலகலுக்கு பின்னணியில் அரசியல் ஆதாயம் உள்ளதாக திரைப்படம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
kamalhaasan:
உலக நாயகன் கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே... தன்னுடைய வாழ்க்கையில் பல ஏற்ற - தாழ்வுகளை கடந்து வந்தவர். குறிப்பாக சினிமாவை பொறுத்த வரை இவருக்கு இருக்கும் அனுபவம் குறித்து சொல்லவே வேண்டாம்.
Kamalhaasan Political Entry:
ரஜினிகாந்த் அரசியலில் இறங்க போகிறேன் என கூறியபோதெல்லாம்... பலமுறை தனக்கு அரசியலில் துளியும் ஆர்வம் இல்லை என கூறி வந்தவர் அதிரடியாக 'மக்கள் நீதி மய்யம்' என்கிற கட்சியை துவங்குவதாகவும், இதற்கான சின்னம், கொடி, மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் அறிவித்து கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலையும் சந்தித்தார்.
பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?
Kamal Alliance with DMK
ஆனால் இவரின் துரதிஷ்டம், ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி வைத்து, தேர்தலில் கமல் மட்டுமாவது களம் காணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு சீட் கூட திமுக ஒதுக்காததால், திமுக கட்சிக்கு ஆதரவு மட்டுமே தெரிவிப்பதாக கூறினார்.
Lok Shabha Election:
இந்த விஷயத்திலேயே கமலை, திமுக டம்மி பாபாப்பாக மாற்றி விட்ட நிலையில்... விஜய்யின் திடீர் அரசியல் என்ட்ரியும், அவர் அரசியலுக்கு வருவதால் திரையுலகை விட்டே விலகுகிறேன் என அறிவித்ததும் கமல்ஹாசனை ஆட்டம் காண வைத்தது.
Vijay Political Entry:
இதனால் கமல்ஹாசனை சிலர் நேரடியாகவே, விஜய் அரசியலில் ஆழமாக கால் வைக்கும் முன்பே இப்படி தைரியமான ஒரு முடிவை எடுத்துள்ளார். ஆனால் கமல்ஹாசன்.. தன்னை ஒரு அரசியல்வாதி என கூறி கொண்டு, அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு இதனை நினைவு படுத்தி கொண்டிருக்கிறாரே தவிர. மற்ற நேரங்களில் திரைப்படம், தயாரிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி என நாளா பக்கமும் காசு பார்த்து கொண்டிருக்கிறார் என விமர்சித்து வந்தனர்.
Kamalhaasan Quit Bigg Boss
அதற்க்கு ஏற்ற போல் ஜனவரி மதம் நடந்து முடிந்த, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் எடுத்த சில முடிவுகள் கமல்ஹாசனின் அரசியல் களத்தையே கொஞ்சம் அசைத்து பார்த்த நிலையில், வேறு வழியே இல்லாமல்... பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Kamal Haasan Shocking Decision:
நடிப்பை பொறுத்தவரை கமல்ஹாசனின் எப்போதும் அது என் உயிர் மூச்சு போன்றது... சினிமாவை விட்டு தன்னை பிரிக்க முடியாது என பலமுறை கூறியுள்ளார். அவ்வப்போது சில படங்களில் நடிக்க கமல் முடிவு செய்திருந்தாலும்... அரசியலுக்காகவே இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.