"எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே".. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான பதிவு!
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Vijayakanth
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Captain Vijayakanth
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.
DMDK
இதையடுத்து விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி ஊர்வலமாக வந்தடைந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
MK Stalin
பிறகு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக 72 குண்டுகள் முழங்க தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
CM MK Stalin
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Chief Minister MK Stalin
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..