Power Shutdown in Chennai:சீக்கிரமாக வேலையை முடிச்சிடுங்க! சென்னையில் இன்று இந்த பகுதியில் 5 மணிநேரம் பவர் கட்
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசா பவன், வேளச்சேரி பிரதான சாலை, ராம் நகர் தெற்கு, கணேஷ் அவென்யூ, அஸ்தலட்சுமி அவென்யூ, ராஜலட்சுமி நகர், ஐஐடி காலனி, பரசுராம் நகர், மனோகர் நகர், பவானியம்மன் கோவில் தெரு, பெல் முடிச்சூர், மணிமங்கலம் பிரதான சாலை, முல்லை நகர், மகாலட்சுமி நகர், கம்பர் அவென்யூ, குமரன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
மயிலாப்பூர்:
கிரீம்ஸ் ரோடு அஜீஸ் முல்க் 1 முதல் 5வது தெரு, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, பேகம் சாஹிப் தெருக்கள், மாடல் ஸ்கூல் ரோடு, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.