Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.! இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
மாடம்பாக்கம், சாந்தி நிகேதன் காலனி, ரமணா நகர் மற்றும் மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மடிப்பாக்கம்:
கக்கன் தெரு, சதாசிவம் நகா், ஏ.ஜி.எஸ். காலனி, அன்னை தெரசா நகர் மற்றும் ராம் நகர் வடக்கு பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
தண்டையாா்பேட்டை:
சுங்கச்சாவடி வடக்கு டொ்மினல் சாலை, டி.எச்.சாலை, செரியன் நகா், சுடலைமுத்து தெரு, அசோக் நகா், மீன்பிடிதுறைமுகம், பூண்டி தங்கம்மாள் தெரு, ஆவூா் முத்தைய்யா தெரு, வ.உ.சி. நகா் சிவகாமி நகா், ஜீவா நகா், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், பி.பி.டி. சாலை, பி.சதானந்தபுரம், ஏ.சதானந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.