MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதால் டைவர்ஸ் ஆச்சுனு சொன்னாங்க... உண்மை இதுதான் - சாந்தினி ஓபன் டாக்

படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியதால் டைவர்ஸ் ஆச்சுனு சொன்னாங்க... உண்மை இதுதான் - சாந்தினி ஓபன் டாக்

நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சாந்தினி, அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 21 2024, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chandini Tamilarasan Nanda Divorce Rumours

Chandini Tamilarasan Nanda Divorce Rumours

கே.பாக்கியராஜ் இயக்கிய சித்து ப்ளஸ் 2 படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. அப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாந்தினி. பின்னர் நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு படிப்பில் கவனம் செலுத்திய சாந்தினி கடந்த 2014-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்ததும் மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினர். இவர் நடித்த படங்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை.

24
Chandini Tamilarasan

Chandini Tamilarasan

இதனால் சின்னத்திரை பக்கம் சென்ற சாந்தினி தாழம்பூ என்கிற சீரியலில் முதன்முதலில் நடித்தார். அதைத் தொடர்ந்து ரெட்டை ரோஜா தொடரில் நடித்த அவர், கடந்த 2018-ம் ஆண்டு நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வழக்கமாக நடிகைகள் திருமணத்துக்கு பின்னர் கவர்ச்சி காட்டுவதை தவிர்ப்பார்கள். ஆனால் சாந்தினி திருமணத்துக்கு பின்னர் தான் கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார் சாந்தினி.

இதையும் படியுங்கள்... கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ்; ரசிகர்களை மிரள வைத்த டாப் 5 சைக்கோ த்ரில்லர் தமிழ் படங்கள்!

34
Actress Chandini

Actress Chandini

இதனிடையே வெகு நாட்களாக தன் கணவருடன் சேர்ந்து இன்ஸ்டாவில் சாந்தினி ரீல்ஸ் எதுவும் போடாமல் இருந்ததால் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் அதுகுறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாந்தினி. அதன்படி, கொரோனா காலகட்டத்தில் நான் என் கணவருடன் சேர்ந்து ரீல்ஸ் போட்டேன். அதன்பின்னர் அதை நிறுத்திவிட்டேன். வெகு நாட்களாக அவருடன் வீடியோ எதுவும் பதிவிடாததால் பிரஸ் மீட்டிலேயே ஒரு பத்திரிகையாளர், உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என கேட்டார்

44
Chandini Tamilarasan interview

Chandini Tamilarasan interview

நான் என் இன்ஸ்டா பக்கத்தை போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அதில் என் சொந்த வாழ்க்கை குறித்து பதிவிட நான் விரும்பமாட்டேன். சிலர் நான் கிளாமராக போட்டோஷூட் நடத்துவதால் என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. எங்களுடையது 13 வருட காதல், இதில் ஒன்றரை ஆண்டுகள் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டோம். பின்னர் மீண்டும் பேச ஆரம்பித்து அதன்பின்னரே திருமணம் செய்துகொண்டோம் என சாந்தினி கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதா சாப்பிட்ட ஆப்பிள் ஏலம்: ரூ. 2 லட்சமா? உண்மை என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved