'கேப்டன் மில்லர்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் போட்டோஸ்!
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும், கேப்டன் மில்லர் பட விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ...

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும்... 'கேப்டன் மில்லர்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இதில் நடிகர் தனுஷ் தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல், நடிகை ப்ரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் போராளியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காடு, மலை போன்ற பகுதிகளில் பல்வேறு சிரமங்களுக்கு நடுவே ஈடுபட்டது. ஒருவழியாக இப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
பொங்கல் பண்டிகையை குறிவைத்து களமிறக்கப்படும் கேப்டன் மில்லர் படத்தின் புரொமோஷ பணிகளில் கடந்த ஒரு வாரமாகவே படக்குழு தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வாத்தி' திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை படைத்தது.
இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில்...இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் தனுஷுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.