MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஆரம்பமே ஷாக்.! எங்கள் கட்சி சின்னத்தை கொடியில் வைப்பதா.? விஜய்க்கு எதிராக களம் இறங்கிய தேசிய கட்சி

ஆரம்பமே ஷாக்.! எங்கள் கட்சி சின்னத்தை கொடியில் வைப்பதா.? விஜய்க்கு எதிராக களம் இறங்கிய தேசிய கட்சி

நடிகர் விஜய்யின் புதிய கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தங்களது கட்சி சின்னத்தை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் சட்ட சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 22 2024, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழகத்தில் 50 ஆண்டு காலத்திற்கு மேல் திமுக- அதிமுக ஆட்சி அதிகாரத்தை மாறி, மாறி கைப்பற்றி வருகிறது. இந்த கட்சிகளுக்கு எதிராக எந்த கட்சி தொடங்கப்பட்டாலும் மீண்டும் இந்த கட்சியோடு கூட்டணி வைக்கும் நிலை தான் உருவாகிறது. இந்தநிலையில் தான் திரைத்துறையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போதே மக்கள் சேவைக்காக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளார்.
 

25
TVK Flag

TVK Flag

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்த விஜய், தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கினார். திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பல லட்சம் பேர் இணைந்தனர். இந்தநிலையில் விரைவில் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், இன்று தனது கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்டார். 

35

நடிகர் விஜய்யின் கட்சி கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள் வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது. இதில் யானை சின்னத்தை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய்க்கு ஷாக் கொடுக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. நடிகர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

45

தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இடம் பெற்றுள்ள  யானையின் சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையகத்திற்கு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின்( BSP) சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது எனவும் உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

55

விஜய் தனது கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி யானை சின்னத்தை வேறொரு கட்சி  பயன்படுத்தக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள யானை அமைதியாக சாந்தமாக உள்ள யானையாகும்,. நடிகர் விஜய் கட்சிக்கொடியில் உள்ள யானை போர் யானையாகும். எனவே தற்போது எழுந்துள்ள எதிர்ப்பிற்கு நடிகர் விஜய் என்ற பதில் அளிக்க போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved