Raiza Work out Photos: இது உடம்பா இல்ல வில்லா? இப்படி வளைக்குறாங்க.. பிக்பாஸ் ரைசாவின் ஒர்க் அவுட் போட்டோஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, தன்னுடைய உடலை வில்லாக வளைத்து, ஒர்க் அவுட் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத பிரபலமாக, விஜய் டிவியில்
ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரைசா வில்சன்.
பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக தோன்றிய இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்கிற ஆசையில் தான்.
மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தேசிய விருது இயக்குனரின் சகோதரரா?
பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல், மிகவும் கவனமாக தன்னுடைய விளையாட்டை விளையாடிய ரைசா... சுவாரஸ்யம் இல்லாமல், வெற்றிபெற வேண்டும் என்கிற இலக்கில் மட்டுமே கவனமாக இருக்கிறார் என மக்கள் நினைத்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு, இவர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த பியர் பிரேமா காதல் திரைப்படம், ஹரீஷ் - ரைசா இருவருக்குமே திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த படத்தை தொடர்ந்து, FIR , பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இவரின் கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை.
தற்போது இவரின் கைவசம் சில படங்கள் உள்ள நிலையில்... அடிக்கடி, கவர்ச்சிக்கு குறைவில்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ரைசா ஒர்க் அவுட் செய்யும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அவை வேறு லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.