ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றம்.. ஆனாலும் வலுவாக கல்லாக்கட்டிய பிரதீப் - வெளியான அவர் சம்பள விவரம்!
Bigg Boss Pradeep Salary : இந்திய மொழிகள் பலவற்றில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாம் பாகம் தமிழில் அண்மையில் துவங்கியது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரிக்கப்பட்டது.
Bigg Boss 7
அதேபோல பிற சீசன்கள் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் துவக்கம் முதலிலேயே 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், மேலும் அவர்களுக்கு இடையே வலுவான போட்டியும் நிலவியது. போட்டியின் முதல் வாரம் நடிகை அனன்யா வெளியேற்றப்பட்டார்.
அதற்கு அடுத்த வாரம் பிரபல நடிகர் பாவா செல்லதுரை அவராகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 21 வது நாள் விஜய் அவர்களும் 28 வது நாள் பிரபல நடிகரும் பாடகருமான யுகேந்திரன் அவர்களும் அதே நாளில் வினுஷா அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
Bigg Boss Pradeep
இந்நிலையில் பிரபல நடிகரும், நடிகர் கவினுடைய நண்பருமான பிரதீப் அவர்கள் இந்த முறை பிக் பாஸ் இல்லத்தில் ஒரு வலுவான போட்டியாளராக காணப்பட்டார். அவர் தான் டைட்டில் வின்னராக மாறப் போகிறார் என்று கூறும் அளவிற்கு அவருடைய strategy சிறப்பாக இருந்தது.
Bigg boss House Pradeep
ஆனால் பிரதீப் அவர்கள் அதிகமாக கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார் என்று கூறியும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு இவரால் ஒரு பாதுகாப்பின்மை உருவாகி உள்ளதாகவும் கூறி, அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
Red Card Pradeep
ரெட் கார்டு கொடுத்து பிரதீப் அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், விஜய் டிவி அவருக்கு வலுவான சம்பளம் கொடுத்து தான் வழி அனுப்பி வைத்துள்ளது. 34 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு விளையாடியதற்கு, நடிகர் பிரதீப்புக்கு சும 6,50,000 ரூபாய் சம்பளம் வாழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.