அருண்விஜய் மருமகளா இது... அழகுல ஆலியா பட்டையே பீட் பண்ணிடுவாங்க போல - வைரலாகும் தியாவின் பியூட்டிபுல் போட்டோஸ்
நடிகர் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
Alia Bhatt, Diya
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பேமஸ் ஆனவர் விஜயகுமார். இரண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு மொத்தம் 6 பிள்ளைகள். இதில் அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய் ஆகியோர் மூத்த மனைவியின் பிள்ளைகள். வனிதா, பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் பிள்ளைகள்.
Arun vijay, Diya
விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து அனிதா மற்றும் கவிதாவை தவிர மற்ற 4 பேரும் சினிமாவில் நடித்துவிட்டனர். குறிப்பாக விஜயகுமாரின் மகன் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
Anitha Vijayakumar with daughter diya
விஜயகுமாருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது மகள் வனிதா மட்டும் பிரிந்து சென்றுவிட்டார். எஞ்சியுள்ள 5 பேரும் தந்தையோடு பாசமாக பழகி வருகின்றனர். விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. அண்மையில் தான் அவர் சென்னையில் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசம் நடத்தினார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் குமார் பேத்திக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!
Diya engagement
விஜயகுமார் மகள் அனிதா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனிதாவின் மகள் தியா, வெளிநாட்டில் படித்துமுடித்துவிட்டு தற்போது திருமணத்துக்கும் தயாராகிவிட்டார். அண்மையில் தான் இவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது.
Diya
பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின் போல இருக்கும் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்கிற இந்தி படத்தில் நடிகை ஆலியா பட் ஒரு சேலை அணிந்திருப்பார். அந்த சேலையை தேடிப் பிடித்து வாங்கிய தியா அதை அணிந்தபின்னர் எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Diya photos
தியாவின் அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், நீங்க ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அழகுல ஆலியா பட்டையே பீட் பண்ணிட்டீங்க எனக் கமெண்ட் செய்து அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். அருண் விஜய்யின் மருமகள் தியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இதென்ன பிக்பாஸ் வீடு மாதிரில இருக்கு... மகள் வீட்டு விசேஷத்திற்கு வாரிசுகளுடன் படையெடுத்து வந்த விஜயகுமார்