அய்யோ போலீஸ் கஸ்டடியா! வேண்டவே வேண்டாம்! நீதிபதியிடம் கதறிய ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள்! என்ன காரணம் தெரியுமா?
பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோர் திருவேங்கடம் தங்களையும் என்கவுண்டர் செய்துவிடுவார்கள். ஆகையால் தங்களை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என்று நீதிபதியிடம் கதறினர்.
Armstrong Murder
Arபகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், திருவேங்கிடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்பவர் மட்டும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
BSP Party Armstrong Murder
அப்போது கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Police Arrest
கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தேமுதிக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Egmore Court
இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் எடுத்த பொன்னை பாலு, வழக்கறிஞர் ஹரிஹரன், அருள், ராமு ஆகிய 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி 4 பேரையும் காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஹரிஹரனுக்கு 7 நாட்கள், மற்ற மூவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
Police Custody
இந்நிலையில், அந்த 4 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோர் திருவேங்கடம் தங்களையும் என்கவுண்டர் செய்துவிடுவார்கள். ஆகையால் தங்களை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாம் என்று நீதிபதியிடம் கதறினர். எனினும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது. கைதான ஹரிஹரனுக்கு 4 நாட்களும், மற்ற மூவருக்கும் 3 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் எப்படி அழைத்துச் செல்கிறீர்களோ, அதேபோல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். உடம்பில் சிறு காயம்கூட ஏற்படக்கூடாது. சரியான நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் கூறிய நீதிபதி உத்தவாத கையெழுத்து பெற்று காவல்துறை காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Ponnai Balu
மேலும் எப்படி அழைத்துச் செல்கிறீர்களோ, அதேபோல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். உடம்பில் சிறு காயம்கூட ஏற்படக்கூடாது. சரியான நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் கூறிய நீதிபதி உத்தவாத கையெழுத்து பெற்று காவல்துறை காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.