MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ‘அரண்மனை 4’ ரிலீஸ் தேதி... போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ரத்னம்

கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ‘அரண்மனை 4’ ரிலீஸ் தேதி... போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ரத்னம்

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 19 2024, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படங்களில் ஒன்று அரண்மனை. கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு வசூலையும் வாரிக்குவித்ததால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் செய்தார் சுந்தர் சி. முதல் பாகத்துக்கு இணையாக அப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இதனால் அதன் மூன்றாம் பாகமும் உருவாகி கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

24
aranmanai 4

aranmanai 4

இந்த மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றியை தழுவியதால், அப்படத்தின் நான்காம் பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இதில் ஹீரோயின்களாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். காமெடியனாக யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... VJS : வாக்களிக்க வந்தபோது Selfie கேட்ட Fan.. காலை தொட்டு வணங்கி அன்பை பரிமாறிய மக்கள் செல்வன் - Viral Video!

34
aranmanai 4, Rathnam

aranmanai 4, Rathnam

அரண்மனை 4 படத்தை ஏப்ரல் 26-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அன்றைய தினம் விஷாலின் ரத்னம் படமும் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்திருந்ததால், இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி இருந்த நிலையில், தற்போது திடீரென அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது படக்குழு.

44
Aranmanai 4 Release Date Changed

Aranmanai 4 Release Date Changed

அதன்படி ஏப்ரல் 26-ந் தேதியில் இருந்து அப்படத்தின் ரிலீஸ் மே 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரண்மனை 4 திரைப்படம் ஒருவாரம் தாமதமாக ரிலீஸ் ஆக உள்ளது. அரண்மனை 4 படம் தள்ளிப்போனதால், நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் சிங்கிளாக போட்டியின்றி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ரத்னம் படத்தை ஹரி இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் சோலோவாக ரிலீஸ் ஆக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Election: விஜய், அஜித் முதல் ரஜினி வரை.. ஒயிட் கலர் டிரஸில் வந்து ஓட்டு போட்ட பிரபலங்கள்- அதுவும் இத்தனை பேரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமன்னா
விஷால் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved