- Home
- Gallery
- Anna serial: கனியை காப்பாற்றிய ஷண்முகம்.. புது ஸ்கெட்ச் போடும் செளந்தரபாண்டி - அண்ணா சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Anna serial: கனியை காப்பாற்றிய ஷண்முகம்.. புது ஸ்கெட்ச் போடும் செளந்தரபாண்டி - அண்ணா சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியை ரியல் பெற்றோர் கடத்தி செல்ல ஷண்முகம் வழி மறித்து காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியை ரியல் பெற்றோர் கடத்தி செல்ல ஷண்முகம் வழி மறித்து காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கனி ஷண்முகத்திடம் என்னை கடத்திட்டு போய் கொன்னுடுவாங்கனு பயந்துட்டேன், உன்னை விட்டு நான் போக மாட்டேன் அண்ணா என்று அழ, ஷண்முகம் அவளுக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறான்.
Zee Tamil Anna serial
மறுபக்கம் மீனாட்சி தனது கணவர் வேலு மாணிக்கத்திடம் அவ நம்ப பொண்ணு தான். அவ வயசுக்கு வந்து இருக்கா.. ஊரையே கூட்டி கிராண்டா செய்ய வேண்டியதை நாளே பேரை வச்சி கொண்டாடிட்டு இருக்காங்க. அவளை நம்ம கூட கூட்டிட்டு போய்டணும் என்று சொல்லி புலம்பி அழுகிறாள். இதையடுத்து சௌந்தரபாண்டி வேலு மாணிக்கத்தை தனியாக கூட்டி சென்று, இதை வேற மாதிரி தான் டீல் பண்ணுனும். அதுவரைக்கும் பொறுமையாக இருங்க என்று சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... அபிராமியை தீர்த்து கட்ட நடக்கும் சதி.. கார்த்தி மீது எழும் சந்தேகம் - கார்த்திகை தீபம் சீரியலில் செம டுவிஸ்ட்
Anna serial Update
சனியனிடம் இவர்களை நான் சொல்ற வரைக்கும் பாத்திர கடை அண்ணாச்சி கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்க ஏற்பாடு பண்ணு என்று சொல்கிறார். பிறகு ஷண்முகம் ரமேஷ், வெட்டுக்கிளி என தன்னுடைய நண்பர்கள் எல்லாரையும் வரவைத்து அருவாளை கொடுத்து வீட்டுக்கு காவல் இருக்க சொல்கிறான். உள்ளே வந்து தங்கைகள் எல்லாரையும் சாப்பிட வைக்கிறான். கனி திரும்பவும் நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று பீல் பண்ண, ஷண்முகம் ஆறுதல் சொல்கிறான்.
Anna serial Today Episode
பிறகு ரூமுக்கு போக, பரணி நீ ரொம்ப நல்ல அண்ணன். கனியையும் உன்னையும் பிரிக்க முடியாது என்று சொல்கிறாள். அதே சமயம் கனி நம்ம வீட்டு பொண்ணு இல்ல, நமக்கு கிடைச்சவள் தான். அவங்க கோர்ட் கேஸ்னு போய், கனி அவங்க பொண்ணு தான் என்று நிரூபித்து விட்டால் கனியை அவங்க கூட அனுப்பிடுவாங்க என்று சொல்ல, ஷண்முகம் கோபப்பட்டு வெளியே வர, பரணியும் பின்னாடியே வர வெளியே ஆட்கள் ஆயுதங்களை தயார் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Ninaithen Vandhai : வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. எழில் செய்யும் உதவி - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்