விஜய் படத்துக்கு வாங்கியதை விட ரஜினி படத்துக்கு கூடுதல் சம்பளம்... அனிருத், லோகேஷ் கனகராஜுக்கு அடித்த ஜாக்பாட்
லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் அனிருத்தும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
anirudh, Lokesh Kanagaraj
இசையமைப்பாளர் அனிருத்தும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் முதன்முதலில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றினர். அப்படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார். அடுத்ததாக தலைவர் 171 படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
anirudh, Lokesh Kanagaraj
அனிருத் - லோகேஷ் காம்போ என்றாலே அது கூடுதல் ஸ்பெஷல் என கூறலாம். பொதுவாக தமிழ் படங்களில் ஆங்கிலப் பாடல்கள் பயன்படுத்தமாட்டார்கள். அந்த டிரெண்டை உடைத்தெறிந்து தாங்கள் பணியாற்றிய படங்கள் அனைத்திலும் ஆங்கிலப்பாடல்களை வைத்து ஒரு டிரெண்ட்டை உருவாக்கிவிட்டனர் அனிருத் - லோகி காம்போ. அந்த ஆங்கிலப் பாடல்கள் வேறலெவலில் ஹிட் ஆனதோடு, பலரது ரிங்டோனாகவும் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Thalaivar 171
இப்படி இவர்கள் காம்போவில் வெளியாகும் படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தரமானதாக இருப்பதற்கு காரணம் அவர்களின் புரிதல் தான். லோகேஷ் இதுவரை தன்னுடன் ஒரு பாடல் கம்போசிங்கில் கூட இருந்ததில்லை என அனிருத்தே பேட்டிகளில் கூறி இருக்கிறார். அவருக்கு என்ன புடிக்கும், என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு தான் வேலை செய்வதாகவும் அந்த அளவுக்கு லோகேஷ் தனக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதாக அனிருத் தெரிவித்திருக்கிறார்.
Anirudh and Lokesh Salary
இவர்களின் அடுத்த டார்கெட் ரஜினியின் தலைவர் 171 படம் தான். அப்படத்துக்காக இருவருமே தங்களது சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். லியோ படத்துக்காக ரூ.8 கோடி சம்பளம் வாங்கிய அனிருத், தலைவர் 171 படத்துக்காக ரூ.10 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். அதேபோல் லியோ படத்தை இயக்க ரூ.35 கோடி சம்பளமாக வாங்கிய லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்துக்காக ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தம்மாத்தூண்டு ரோலுக்கு பில்டப் எதுக்கு... வாங்க பாலஸ்தீன போருக்கு போலாம் - லோகேஷுக்கு மன்சூர் அலிகான் அழைப்பு