MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Amala Shaji Buy New Car : 22 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள குட் நியூஸ் சொன்ன அமலா ஷாஜி - குவியும் வாழ்த்துக்கள்

Amala Shaji Buy New Car : 22 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள குட் நியூஸ் சொன்ன அமலா ஷாஜி - குவியும் வாழ்த்துக்கள்

Amala Shaji Buy New Costly Car : இன்ஸ்டாகிராம் மூலம் இளசுகள் மத்தியில் பேமஸாக இருக்கும் அமலா ஷாஜி, தற்போது குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருப்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 13 2024, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Amala Shaji Family

Amala Shaji Family

சினிமா பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பேமஸ் ஆனவர் அமலா ஷாஜி. சினிமா நடிகைகள் பாடல்களில் எந்தமாதிரி உடையணிந்திருக்கிறார்களோ அதை அட்டர் காப்பி அடித்து அப்படியே ரீ-கிரியேட் செய்து ரீல்ஸ் போடுவது தான் அமலா ஷாஜியின் ஸ்பெஷல். அவரின் இந்த ரீல்ஸ் வீடியோக்கள் டிரெண்டானதால் அமலா ஷாஜிக்கு இன்ஸ்டாவில் பாலோவர்களும் அதிகரிக்கத் தொடங்கினர். தற்போது அவரை 4 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். 

24
Amala Shaji

Amala Shaji

இப்படி இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் பலரும் ஆரம்பத்தில் பாலோவர்களை ஈர்ப்பதற்காக வீடியோ வெளியிடுவார்கள். பின்னர் பாலோவர்கள் எண்ணிக்கை மில்லியன் கணக்கை தொட்டதும் அதைகாட்டியே இன்ஸ்டாவில் பணம் சம்பாதிக்க தொடங்கி விடுவார்கள். அப்படி தான் அமலா ஷாஜியும் தன்னிடம் உள்ள 4 மில்லியன் பாலோவர்களை காட்டி இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் கூட அமலா ஷாஜி பற்றி ஒரு பகீர் தகவலை பகிர்ந்திருந்தார். 

இதையும் படியுங்கள்... Premgi : பெரியப்பாவிடம் ஆசிபெற்ற பிரேம்ஜி... புதுமண ஜோடியை புன்னகையுடன் வாழ்த்திய இளையராஜா - வைரலாகும் போட்டோ

34
Amala Shaji new car

Amala Shaji new car

அதன்படி அந்த தயாரிப்பாளர் தனது படத்தை புரமோட் செய்யும் விதமாக 30 செகண்டுக்கு வீடியோ வெளியிடுமாறு கேட்டதற்கு அமலா ஷாஜி ரூ.2 லட்சம் கேட்டதாக தன் மனக்குமுறல்களை கொட்டினார். இதுமட்டுமின்றி அமலா ஷாஜி புரமோட் செய்த டிரேடிங் செயலியை பயன்படுத்தி அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக அவரது பாலோவர் ஒருவர் அண்மையில் புகார் அளித்திருந்தார். இப்படி சர்ச்சைக்கு பஞ்சமில்லாத பிரபலமாக வலம் வருகிறார் அமலா ஷாஜி.

44
Amala Shaji bought Hyundai Exter Car

Amala Shaji bought Hyundai Exter Car

இந்த நிலையில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார் அமலா ஷாஜி. அதன்படி அவர் தற்போது சொந்தமாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஹுண்டாய் நிறுவனத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட EXTER காரை அமலா ஷாஜி வாங்கி இருக்கிறார். கருப்பு நிறத்தில் இருக்கும் டாப் மாடல் வேரியண்டான அந்த காரின் விலை ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. புது கார் வாங்கியுள்ள அமலா ஷாஜிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... GV Prakash : இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? வியக்க வைக்கும் GV-ன் Net Worth இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved