செந்தில் முதல் எவர் கிறீன் நாயகி நிரோஷா வரை.. லால் சலாம் Press Meet - மேடையை அலங்கரித்த ஸ்டர்ஸின் கூல் Clicks!
Lal Salaam Press Meet : பிரபல இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.
Lal Salaam Press Meet
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் ஒரு எக்ஸ்டெண்டெட் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ளார். நேற்று பிப்ரவரி 5ஆம் தேதி இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
சரியான நேரத்தில்.. தளபதியின் தரமான வீடியோவை வெளியிட்டு மாஸ் சம்பவம் செய்த பிக்பாஸ் சரவணன் விக்ரம்!
Vishnu
இந்த திரைப்படத்தின் நாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ்.
Senthil
மேலும் பல ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் பிரபல மூத்த தமிழ் திரையுலக நடிகர் செந்தில் அவர்கள்.
Nirosha
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் மூத்த நடிகை தான் நிரோஷா. இந்நிலையில் முதல் முறையாக அவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.