MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 2026ல் விஜயின் தவெகவுக்கு செக்.. கமல் உடன் திமுக போட்ட பிளான்.. குறுக்கே வந்த பாஜக + நாதக கூட்டணி..

2026ல் விஜயின் தவெகவுக்கு செக்.. கமல் உடன் திமுக போட்ட பிளான்.. குறுக்கே வந்த பாஜக + நாதக கூட்டணி..

லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதை முக்கிய கட்சிகள் கணக்கிட்டு வருகின்றது.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 08 2024, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
TVK Vijay

TVK Vijay

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி. அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் 2026-ல்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

28
Tamilaga Vetri Kalagam

Tamilaga Vetri Kalagam

தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இறங்கியுள்ளதால் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு 2026ல் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. ஆளும் கட்சியான திமுக புதிய வியூகங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

38
Assembly Election 2026

Assembly Election 2026

இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் (எம்என்எம்) கட்சியை வைத்து திராவிட முன்னேற்ற கழகம் முக்கிய பிளானை போடுவதாக கூறுகின்றனர். 2018-ல் அரசியல் கட்சியை நிறுவிய நடிகர் கமல்ஹாசனால் 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

48
Thalapathy Vijay

Thalapathy Vijay

மூன்றாவது கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவித்து, கோவை தெற்கு சட்டசபையில் போட்டியிட்ட கமல்ஹாசன் மற்றும் அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் செல்வாக்கை முறியடிக்க கமல்ஹாசனின் வருகை உதவும் என திமுக தலைவர்கள் கருதுகின்றனர்.

58
Kamal Haasan

Kamal Haasan

அதனால்தான் திமுக கூட்டணிக்குள் எம்என்எம் கட்சியும் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கின்றனர் முக்கிய அரசியல் புள்ளிகள். திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம், விசிக, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.) ஆகிய கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சியும், கமல்ஹாசன் கட்சியும் ஏற்கனவே இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

68
Seeman

Seeman

எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகளுடன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை சந்தித்தது. அதேபோல பாஜக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே மற்றும் சரத்குமார் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு பக்கம் நாம் தமிழர் கட்சி தனியே தனக்கென வாக்கு சதவீதத்தோடு சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

78
Annamalai

Annamalai

சீமான் உடன் தளபதி விஜய் சேருவார் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், அவர் தவெகவின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் போன்றவற்றை மக்களிடையே எடுத்து கூறி அதன்பிறகே எந்தவொரு கட்சியும் விஜயுடன் இணையும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இந்த நிலையில் ரஜினிக்கு அடுத்து வந்த கமல் திமுகவில் இருக்க, அடுத்தவொரு நடிகரான விஜய் எந்த பக்கம் இணைவார் அல்லது தனித்து களம் காண்பாரா? என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்.

88
2026 Elections

2026 Elections

சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார். ஒருவேளை அது விஜய் தலைமையிலான கூட்டணியை தான் குறிப்பிடுகிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியோ 2026 சட்டமன்ற தேர்தல் ஆனது மும்முனை போட்டியாகவோ அல்லது நான்கு முனை போட்டியாகவோ அமையும் என்பது இப்போதே தெளிவாக தெரிகிறது.

9 முறை அதிமுக தோல்வி.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி பழனிச்சாமி

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved