MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்! முதல் உறுப்பினர் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்! முதல் உறுப்பினர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மகா சிவராத்திரியை முன்னிட்டு, செயலி மூலம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 08 2024, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தன்னுடைய திரைப்பட விழாக்களில், அரசியல் குறித்து அதிகம் பேசி வந்த விஜய்.. கடந்த இரண்டு வருடமாக அரசியலில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக தன்னுடைய கட்சியின் பெயரை, தமிழக வெற்றி கழகம் என தேர்தல் ஆணையத்தில் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதிவு செய்தார்.

25

விஜய்யின் இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்படைய வைத்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தன்னுடைய தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்ட விஜய், அரசியலில் முழு நேரம் ஈடுபடப் போவதாகவும், எனவே தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'கோட்' மற்றும் அடுத்ததாக நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தை நடித்து முடித்துவிட்டு, முழுமையாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


 

35

விஜய்யின் இந்த அறிக்கைக்கு பலர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனையும் ஒப்பிட்டு பேசியது பரபரப்பாக பார்க்கப்பட்டது. அதாவது ரஜினிகாந்த் போல் அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்... என ஏமாற்றாமல் அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்த விஜய், கமலஹாசன் போல் அரசியலிலும், நடிப்பிலும், கவனம் செலுத்தாமல் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.
 

45

 இதைத்தொடர்ந்து விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே அவரது உறுப்பினர் சேர்க்கை குறித்த தகவல்கள் அவ்வபோது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்தின்' உறுப்பினர் சேர்க்கை என ஒரு படிவம் சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து அது உண்மை அல்ல என்று புஸ்ஸி ஆனந்த் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தினார்.
 

55

ஆனால் இன்று, அதாவது மகா சிவராத்திரி மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கட்சியின் செயலியை அறிமுகம் செய்து, நடிகர் விஜய் தன்னை முதல் உறுப்பினராக இணைத்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved