- Home
- Gallery
- Surya Son Dev: பிரபல இயக்குனரின் படத்தில் சூர்யாவின் மகன் நடிக்கிறாரா? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைரல் போட்டோ.
Surya Son Dev: பிரபல இயக்குனரின் படத்தில் சூர்யாவின் மகன் நடிக்கிறாரா? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைரல் போட்டோ.
Surya Son Dev: சூர்யாவின் மகன் தேவ் கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது சூர்யாவின் மகன் தேவ் நடிகராகப் போவதாக இணையத்தில் ஒரு தகவல்கள் பரவி வருகிறது.

suriya son
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா ஒரு சில படங்களில் தோன்றி வருகிறார். கடைசியான ஜோதிகா -சமுத்திர கனி நடிப்பில் உடன்பிறப்பு திரைப்படம் வெளியானது.
suriya son
பாண்டிராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று தந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நல்ல படைத்தது.
suriya son
எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது 18 ஆண்டுகள் கழித்து, பாலா இயக்கத்தில் தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
suriya son
இப்படத்தை சூர்யா தனது 2D தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
suriya son
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால், இதனால் சூர்யா 41 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
suriya son
இதைத்தொடர்ந்து, இவரது கைவசம் உள்ள வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விருக்கிறார். இதையடுத்து, சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கராவுடன் என அடுத்தடுத்த, படங்களில் சூர்யா பிஸியாக நடிக்கவுள்ளார்.
suriya son
இந்நிலையில், சூர்யாவின் மகன் தேவ் கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது சூர்யாவின் மகன் தேவ் நடிகராகப் போவதாக இணையத்தில் ஒரு தகவல்கள் பரவிவருகிறது.
suriya son
அந்த புகைப்படத்தை பார்க்கும்போது எதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில், எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.
suriya
இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் தேவ் திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறாரா? அல்லது வேறு எதாவது தகவலா என்று குழப்பியுள்ளனர். இருப்பினும், அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து என்ன என்பதை பார்ப்போம்.