சிகிச்சைக்கு பணமின்றி தவித்த வெங்கல் ராவ்... ஒரு ரூபா கூட கொடுக்காத வடிவேலு; ஓடோடி வந்து உதவிய சிம்பு
கை, கால் செயலிழந்து சிகிச்சைக்கு பணமின்றி தவித்த காமெடி நடிகர் வெங்கல் ராவுக்கு நடிகர் சிம்பு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
vengal Rao
சினிமாவில் ரொமான்ஸ் கூட ஈஸியாக செய்துவிடலாம், ஆனால் காமெடி பண்ணுவது தான் கஷ்டம் என முன்னணி நடிகர்கள் பலர் கூற கேட்டிருப்போம். அப்படி காமெடி காட்சிகளால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்கள் ஏராளாம். ஆனால் அவர்களில் புகழ் வெளிச்சம் பெற்றது வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், விவேக், யோகிபாபு, சூரி போன்ற ஒருசிலரே. இந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு அவர்களுடன் நடித்த சக நடிகர்களும் ஒரு காரணம்.
Comedy actor vengal Rao
குறிப்பாக வடிவேலுவின் காமெடி காட்சிகள் ஹிட்டாக அவருடன் நடித்த சிங்கமுத்து, போண்டா மணி, வெங்கல் ராவ், அல்வா வாசு, பாவா லட்சுமணன் போன்ற சக நடிகர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும் வடிவேலு அளவுக்கு அவர்களால் முன்னணி நகைச்சுவை நடிகர் அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை. இதற்கு வடிவேலுவின் அடக்குமுறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
vadivelu, vengal Rao
அப்படி வடிவேலு உடன் காமெடி காட்சிகளில் நடித்து பேமஸ் ஆனவர் தான் வெங்கல் ராவ். இவர் பெயர் பலருக்கும் பரிட்சயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர் நடித்த காமெடி காட்சிகளை சொன்னால் உடனே தெரிந்துவிடும். குறிப்பாக கந்தசாமி படத்தில் வடிவேலு உடன் தேங்காய் பேரம் பேசும் காட்சி தொடங்கி சீனா தானா 007 படத்தில் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடுவேன் என மிரட்டும் கதாபாத்திரம் வரை இவரும் வடிவேலுவும் சேர்ந்து நடித்து ஹிட்டான காமெடி காட்சிகள் ஏராளம்.
இதையும் படியுங்கள்... 4 மணிநேரம் மேக்கப்! 70 நாள் கமல் பட்ட கஷ்டம்! உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது! ஷங்கர் ஆச்சர்யம்!
Vadivelu, vengal rao, Simbu
வடிவேலு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்ட காலகட்டத்தில் வெங்கல் ராவும் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். தற்போது விஜயவாடாவில் வசித்து வரும் வெங்கல் ராவ், தனக்கு ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டதாகவும், தற்போது சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டு இருந்தார்.
Simbu help for vengal Rao
இதைப்பார்த்த பலரும் வடிவேலு அவருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் வடிவேலு வழக்கம்போல் செவிசாய்க்கவில்லை. வடிவேலு உதவாவிட்டாலும், வெங்கல் ராவின் பரிதாப நிலையை அறிந்த உடன் நடிகர் சிம்பு ஓடோடி வந்து உதவி இருக்கிறார். அவர் வெங்கல் ராவின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார். சிம்புவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?