- Home
- Gallery
- உடம்பில் வழியும் ரத்தம்.. மாறுபட்ட வேடத்தில் தனுஷ் - D50 First Look ரிலீஸ் எப்போது? அவரே வெளியிட்ட தகவல் இதோ!
உடம்பில் வழியும் ரத்தம்.. மாறுபட்ட வேடத்தில் தனுஷ் - D50 First Look ரிலீஸ் எப்போது? அவரே வெளியிட்ட தகவல் இதோ!
Dhanush 50 First Look : பிரபல நடிகர் தனுஷ் அவர்களுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள அவரது ஐம்பதாவது திரைப்படம் குறித்த அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

actor dhanush
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராஜ்கிரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான பா. பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கினார் தனுஷ். அந்த படத்தில் அவர் ஒரு கேமியோ கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
dhanush new movie
அதேபோல பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என்று மூன்று சினிமா உலகிலும் இப்போது முன்னணி நடிகராக பல வெற்றி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் தனுஷ் அவர்கள், அண்மையில் தான் இரண்டாவதாக இயக்கவுள்ள படம் குறித்த தகவலை வெளியிட்டார்.
D50 update
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை, தனுஷ் அவர்களே இயக்கி உள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்தம் வழியும் உடலோடு காட்சியளிக்கும் தனுஷின் போஸ்டர் இப்பொது வைரலாகி வருகின்றது.