என்னது திமுகவிற்கு போட்டி பாஜகவா? அண்ணாமலை கூறியது காமெடியாக இருக்கு! பங்கமாய் கலாய்க்கும் போஸ் வெங்கட்.!
திமுகவிற்கு போட்டி பாஜக என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் பதிலடி கொடுத்து விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை;- 2024 தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். தமிழகத்தில் பாஜக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்று கூறினார். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் சந்தோஷமோ வருத்தமோ இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நான் ஒருத்தர் இருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்பட்டதும் கிடையாது. ஒருவர் சென்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. தமிழகத்தில் பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் வரும். கூட்டணியில் யாரை சேர்ப்பது, கூட்டணியை விரிவுப்படுத்துவது குறித்தெல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக மற்றும் திமுக இடையே தான் போட்டி அண்ணாமலை கூறியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- கூட்டணியில் இருந்து போறவங்க போகட்டும்.. அதை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்.. அண்ணாமலை.!
இந்நிலையில், அண்ணாமலை சொன்ன திமுகவிற்கு போட்டி பாஜக என்பது அவ்வளவு காமெடி என போஸ் வெங்கட் கூறியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் இயக்குனருமான போஸ் வெங்கட் எக்ஸ் தளத்தில்;- சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களை பார்த்து நான்தான் இனிமேல் உங்களுக்கு போட்டி என்று( போஸ் வெங்கட் ) சொன்னால் எவ்வளவு காமெடியாக இருக்குமோ அவ்வளவு காமெடி அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது என பதிவிட்டுள்ளார்.